நன்றி நவிலல்

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்..

நன்றி நவிலல்

எமது அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் கடந்த 2017 பெப்ரவரி மாதம் 27ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2017.08.01ம் திகதி வரை 156 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது அனைவரும் அறிந்த விடயம்.

இக்காலப் பகுதியினுள் பல்வேறு சிரமங்கள்¸ அவமானங்கள்¸ இன்னல்களை அனுபவித்து எமது சத்தியாக்கிரக போராட்டத்தினை நடாத்திக் கொண்டு வந்தோம்.

கிழக்கு மாகாண சபையினால் வேலையற்ற பட்டதாரிகளை உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டதையடுத்து போராட்டம் 2017.08.01ம் திகதி தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

தொழிலுரிமை வேண்டி நாம் மேற்கொண்டிருந்த சத்தியாக்கிரக போராட்டத்திற்கு பல நல்லுள்ளங்கள் பண உதவி¸ உடல் உள உதவிகள் அளித்ததோடு அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களும் வலுச்சேர்த்து போராட்டம் வெற்றிகரமாக அமைய பல்வேறு உதவிகள் நல்கினர்.

இச்சந்தர்ப்பத்தில் அவர்கள் அனைவருக்கும் நன்றிகள் கூறக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

எங்கள் அனைவருக்கு அரச தொழில்வாய்ப்பு கிடைக்கவும்¸ சுபீட்சம் நிறைந்த வளமான வாழ்வு அமையவும் பிரார்த்தனைகள் புரியுமாறும் அனைவரிடமும் வேண்டிக் கொள்கின்றோம்.


MI.Anas
Coordinator
Ampara

Comments

  1. How to make money from Betway betting exchange?
    How to หารายได้เสริม make money from Betway betting exchange? · Easy payment methods · Payment methods · Odds of getting Where can I find money in Betway?Who owns Betway?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இலங்கை பற்றிய பொது அறிவு

250 பொது அறிவு வினா விடைகள்